CPI-M காளிபாளையம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி CPI-M காளிபாளையம் கிளை சார்பில் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் மகாலிங்கம் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் தலைமை தாங்கினார், கிளைச்செயலாளர்
தோழர் பாட்டுசாமி மற்றும் கிளை தோழர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகள் விரைந்து கோரானா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும், கோரானா தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்து பகுதிகளிலும் வழங்கிட வேண்டும் , ஆக்சிசன் உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டும்,
ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா காள பாதுகாப்பு நிவாரணத்தை வழங்கும்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் S.Sசக்திவேல்