ரூ.135 கோடி நிதி உதவி: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதி உதவி: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
வாஷிங்டன்,
கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு துணை நின்று தேவையான உதவியை அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளன.
இந்த நிலையில், கொரோனாவால் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதி உதவியை அளிக்க இருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி இ ஓ சத்ய நாதெல்லா, இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து கூறியிருப்பதாவது: இந்தியாவில் தற்போது நிலவும் சூழல் கடும் வேதனை அளிக்கிறது. ஆக்சிஜன் கருவிகள் போன்ற மருத்துவ பொருட்கள் அளிப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என்றார்.