மிசோரம் காட்டுத் தீயை கட்டுப்படுத்த, முழு ஒத்துழைப்பு தரப்படும்
மிசோரம் மாநில முதல்-மந்திரி சோரம்தங்காவிடம், பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, “மிசோரம் காட்டுத் தீயை கட்டுப்படுத்த, முழு ஒத்துழைப்பு தரப்படும்” என்று உறுதியளித்தார்.
இதுபற்றி பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மிசோரம் முதல்-மந்திரி சோரம்தங்காவிடம் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவியுள்ள காட்டுத்தீயின் நிலவரங்களை பற்றி அவர் விளக்கினார்” என்று கூறி உள்ளார்.
காட்டுத்தீயானது, அந்த மாநிலத்தின் பல பகுதிகளை துண்டித்துவிட்டது. ‘மிசோரம் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்’ என்று பிரதமர் கூறினார்.. தமிழ் மலர்
மின்னிதழ்.
செய்தியாளர்.
தமீம் அன்சாரி..