முகக்கவசம் அணியாத 905 பேர் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 905 பேர் மீது நடவடிக்கை

✍தூத்துக்குடி மாவட்டத்தில் (16.04.2021) ஒரே நாளில் முக கவசம் அணியாத 905 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூபாய் 1,81,000/- பணம் அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 16 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டு ரூபாய் 8,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

✍தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500/- அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் (16.04.2021) ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 461 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 26 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 195 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 74 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 25 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 14 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 68 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 42 பேர் மீதும் என மொத்தம் 905 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 1,81,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் (16.04.2021) ஒரே நாளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 07 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 4 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 3 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 2பேர் மீதும் என மொத்தம் 16 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 8,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் ஜீவா

Leave a Reply

Your email address will not be published.