ஓதிமலை முருகன் கோவில்
ஓதி_மலை 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலையில் அமைந்துள்ள ஓதிமலை முருகன் கோவில். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஓதிமலை முருகன் கோவில். முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் மலைகளிலேயே மிக உயரமானதாகவும், செங்குத்தானதாகவும் இந்த மலை அறியப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த மலையில் வீற்றிருக்கும் இறைவனைக் காண, 1,800 படிகள் எறிச்செல்ல வேண்டும். இத்தல இறைவனின் பெயர், ‘ஓதிமலையாண்டவர்’ என்பதாகும். இந்தக் கோவிலைப் பற்றிய விவரத்தை இங்கே பார்க்கலாம்.
படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனிடம், “உயிர்களின் உருவாக்கத்திற்கு மூல ஆதாரமாக விளங்கும் ‘பிரணவ’த்தின் பொருள் என்ன?” என்று முருகப்பெருமான் கேட்டார். ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை பிரம்மனால் கூற முடியவில்லை. இதனால் அவரை சிறையில் அடைத்த முருகப்பெருமான், பிரம்மதேவரின் படைப்பு தொழிலை சில காலம் செய்து வந்தார். அதுவும் படைப்புத் தொழிலை இந்த ஆலயம் இருக்கும் மலையில் இருந்தே, முருகப்பெருமான் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
செய்தியாளர் சக்திவேல்
தமிழ்மலர் மின்னிதழ்