கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சமூக சீர்த்திருத்த கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் அவர்களின் 91 ஆம் ஜனன (13.04.1930) தினம் இன்றாகும்….
தமிழ் சினிமாவில் குறுகிய காலங்களில்
இவர் எழுதிய அத்தனை பாடல்களும் பிரபல்யம் அடைந்த பாடல்களே…இவரின்
ஆயுள் நீடித்திருந்திருந்தால் தமிழ் நாட்டில் இவரே கவிஞர்களில் முதன்மையானவர் என்ற முத்திரையுடன்
தடம் கண்டிருப்பார்….இவருடைய ஆயுள் வெறும் 29 ஆண்டுகளே. வாழ்ந்த நாட்கள்
கொஞ்சமெனினும், பல யுகங்கள் போற்றும் கவிஞராக இவர் சரித்திரம் படைத்தவர் ஆவார்…
1930 .04.13.அன்று தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் “செங்கம்படுத்தான்”என்ற சிற்றூரில்
ஓர் விவசாய குடும்பத்தில் அருணாச்சலம் விஷாலாட்சி இணையருக்கு மகனாக பிறந்தார்.வெறும் இரண்டாம் வகுப்பிலே
படிப்பை நிறுத்தியவர்.பின்னாளில் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றிய கவித்திலகமானார். மனைவி பெயர் கௌரவம்மாள்,மகன் பெயர் குமாரவேல்.விவசாயியாக
இருந்த போதிலும் சிறு வயதிலிருந்தே
கவிதை,சமூக சீர்திருத்த சிந்தனைகளில்
மிகவும் ஆர்வம் கொண்டவர். நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சக்தி நாடக சபாவில் பணியாற்றினார்.பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்ற pks
தன் வாழ்நாளில் என்றுமே பாரதிதாசன் அவர்களை போற்றிய வண்ணமே நன்றிக்கடன ஆற்றினார். “நல்லதைச் சொன்னா நாத்திக கவிஞனா”என சுயமரியாதை மேடைகளில் பாடிக்கொண்டிருந்த இவரை சித்தாந்த கவிஞராக்கியது பொதுவுடமைக் இயக்கம்.29 ஆண்டுகளில் 17 பணிகளை ஆற்றியவர் pks என கம்யூனிஸ்ட் தலைவர் திரு. ஜீவா கூறியுள்ளார்.
எழுதும்போது “பாரதிதாசன் வாழ்க”என
பிள்ளையார் சுழிக்கு பதிலாக இட்டு எழுதுவது இவரது வழக்கம். அக்காலங்களில், தனது தந்தையின் பெயரின் முதல் எழுத்தையும் தனது பெயரின் மூன்றெழுத்தையும் இணைத்து “அகல்யா”என்ற பெயரில்
ஜனசக்தி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றி வந்தார். ஒரு தடவை ஜனசக்தி பத்திரிக்கை ஆசிரியர் திரு.ஜீவா அவர்கள் pks இடம் கம்பன்,பாரதி,இளங்கோ,போன்ற பெரிய கவிஞர்கள் எல்லாம் சிறிய பெயர் வைத்திருக்கும்போது,நீ மட்டும் ஏன் பெயரை மிக நீளமாக வைத்திருக்கின்றாய் எனக்கேட்க அதற்கு pks அளித்த பதில் அவர்கள் பெரிய கவிஞர்கள் நான் சிறிய கவிஞன் பெயரிலாவது நீளமாக இருக்கட்டுமே என்றார். திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனை ஒரு தடவை சந்தித்தார்.வேளைப்பளு காரணமாக எம் எஸ் விஸ்வநாதனால் இவரை சந்திக்க முடியாமல் போய்விட்டது.உடனே pks எம் எஸ் விஸ்வநாதனின் உதவியாளரிடம்
தான் எழுதிய கவிதை வரிகளில்
சிலவற்றை கொடுத்து படித்து பார்க்கச்சொல்லுங்கள் எனச்சொல்லி புறப்பட்டார்.
எம் எஸ் விஸ்வநாதன் அதை படித்துப் பார்த்து அசந்தே போனார். ஓர் அருமையான கவிஞரையா நான் புறக்கணித்தேன் என வருந்தினார்..பின்னாளில் அந்த வரிகள் தான் “பாசவலை”படத்தில் பாடலாக பதிவானது “குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம் குள்ளநரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் ஆக மொத்தம் மனிதனுக்கு எட்டடிதான் சொந்தம்”
அக்காலத்தில் இப்பாடல் அனைவரையும்
வியக்க வைத்தது.ஒரு படத்தில் பாடல் எழுதியதற்காக தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கச் சென்றார். அவர் pks ஐ
நீண்ட நேரம் காக்க வைத்து நிற்கச்செய்து விட்டார். உடனே “தாயால் பிறந்தேன், தமிழால் வளர்ந்தேன், நாயே உன்னை நடுத்தெருவில் சந்தித்தேன் நீ
யாரடா என்னை நிற்கச் சொல்ல”என எழுதிக் கொடுத்து விட்டு சென்று விட்டார்.
தயாரிப்பாளர் மிரண்டு போய் pks வீட்டுக்கே பணத்தை அனுப்பினார்.சென்னையில் இவர் நடந்து போகும்போது செருப்பறுந்துவிட்டது.இவர் அதை கையில் ஏந்தியவாறு எடுத்துச் செல்லும் போது நண்பர் ஒருவர்,என்ன செருப்பறுந்திருச்சா எனக் கேட்டார்.உடனே இதற்கும் ஓர் பாட்டெழுதினார்.”உறுப்பறுந்து போனாலும் உள்ளங்களங்கேன்,செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பேன்,நெருப்பை எதிர்பார்க்கும் அஞ்சாத எண்ணம் படைத்த பின் கொதிக்கும் தார் எனக்கு குளிர் நீர்”என்பது அவ்வரிகள்.pks அண்ணன் மனைவிக்கு வளைகாப்பு,அப்போது pks இன் மனைவி கௌரவம்மாள் கிண்டலாக “அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்தில புன்சிரிப்பு “என கூறினார். பின்னாளில் “கல்யாண பரிசு “படத்தில் இவ்வரிகளை பாடலாக்கினார் pks.அதற்கான சம்பளத்தை,இது நீ எழுதிய பாடல் என கூறி தன் மனைவிடம் பணத்தை வழங்கினார். மக்கள் திலகம் எம்ஜியாரின் சினிமா,அரசியல் வாழ்வுக்கு பெரிதும் துணை நின்றது pks இன் பாடல்களே. சக்கரவர்த்தி திருமகள்,மகாதேவி,நாடோடி மன்னன்,அரசிளங்குமரி,திருடாதே,
விக்ரமாதித்தன்,கலையரசி போன்ற எம்ஜியார் படங்களுக்கும்,ரங்கூன் ராதா,அம்பிகாபதி,புதையல்,மக்களைப்பெற்ற மகராசி,உத்தமபுத்திரன்,பதிபக்தி,
பாகப்பிரிவினை,தங்கப்பதுமை,இரும்புத்திரை,புனர்ஜென்மம் போன்ற சிவாஜி கணேசன் படங்களுக்கும் இவர் பாட்டெழுதியுள்ளார்.இவர் எழுதிய திருடாதே பாப்பா திருடாதே,தூங்காதே தம்பி தூங்காதே ,போன்ற பாடல்கள் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைந்ததாகும்.தந்தை பெரியார், பேரறிஞர்

பாகப்பிரிவினை,தங்கப்பதுமை,இரும்புத்திரை,புனர்ஜென்மம் போன்ற சிவாஜி கணேசன் படங்களுக்கும் இவர் பாட்டெழுதியுள்ளார்.இவர் எழுதிய திருடாதே பாப்பா திருடாதே,தூங்காதே தம்பி தூங்காதே ,போன்ற பாடல்கள் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைந்ததாகும்.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,கலைஞர்,காமராஜர்,
கருணாநிதி, கவியரசு கண்ணதாசன் போன்றோர் பாராட்டிய உயர் கவி
திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் திகதி தனது 29 ம் வயதில் காலரா நோய்க்கு ஆளாகி சென்னையில் உயிர் துறந்தார். பாடல் பாவலன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தாலும் அவரின் வைர வரிகள்
என்றுமே தமிழைவிட்டு மறையாது….!
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி
சதீஷ் கம்பளை