நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே  நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இதையடுத்து,  கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி 125-இல் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.  வாக்களிக்க வந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிற சூழலில்,  பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன. 

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே முழு பொறுப்பு என்று மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: 

இன்று நடைபெற்ற சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே முழு பொறுப்பு. இச்சம்வத்திற்கு அவரே முழு சதிகாரர். மத்திய படைகள் மீது நான் குற்றம் சுமத்த மாட்டேன். ஏனெனில், உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் செயல்பட்டுள்ளனர்” என்றார். 

கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த போது, வாக்குச்சாவடிக்கு  வெளியே மத்திய பாதுகாப்பு படையினருடனான மோதலின் போது, நான்கு பேர்  சுட்டுக்கொல்லப்பட்டனர். 

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.