முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மோடி அரசாங்கத்தைப் போல, மிக கடுமையான எந்தவொரு ஜனநாயக அரசும் உலகில் எங்கும் இல்லை – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச அளவில் தடுப்பூசி போடவேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் இதையே வலியுறுத்தி உள்ளனர். சர்வதேச அளவில் தடுப்பூசி போடவேண்டிய தேவை தற்போது இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. அனைத்து வயதினருக்கும் முன்பதிவு இன்றி, தடுப்பூசி போடவேண்டும் என்பதே இந்த தருணத்தில் தேவையாக இருக்கிறது.

மத்திய அரசின் விஞ்ஞானமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாட்டின் காரணமாக, ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு அனுமதித்து வருகிறது. ஒரு பெரிய பேரழிவு நாட்டுக்கு காத்திருக்கிறது. மோடி அரசாங்கத்தைப் போல, மிக கடுமையான எந்தவொரு ஜனநாயக அரசும் உலகில் எங்கும் இல்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கை முதல் தடுப்பூசி போடும் திட்டம் வரை, பா.ஜ.க. அரசின் தவறான கொள்கைகளுக்கு நாட்டு மக்கள் பெரும் விலை கொடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.