திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சமூகத்தில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தியாளர் ரசூல்
தமிழ்மலர் மின்னிதழ்