புத ஆதித்ய யோகம்

புதனும், சூரியனும்
ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது
புத ஆதித்ய யோகம்

பலன்:
இந்த யோகம் ஜாதகருக்கு அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும்.

எல்லோருக்கும் கொடுக்காது.

ஏன் கொடுக்காது?

சூரிய வட்டத்தில், சூரியனுக்கு மிக அருகில், தொடர்ந்து சூரியனுடன் வரும் கிரகம் புதன். ஆகவே பலருடைய ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும்.

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது கிரகங்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.

சிம்மம், மேஷம், மிதுனம்
கன்னி ஆகிய 4 வீடுகளில்
இந்த யோகம் அமைந்திருந்தால்
அது பலனளிக்கும்.
மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான பலனைக் கொடுக்கும்.

மேஷ லக்கினக்காரர்களுக்குப்
புதன் 3 மற்றும் 6ஆம்
வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் அவ்வளவாக பலனளிக்காது.

ரிஷப, சிம்ம, துலா, மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும்

புதன் சூரியனுடன்
6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை.

சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கலாம்.

ஜோதிட ஆய்வில்
Astro செல்வராஜ்
Cell : 9842457912

வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.