1961 இல் மக்கள் திலகம் எம்ஜியார் சரோஜாதேவி நடித்து,ப.நீலகண்டன் இயக்கத்தில்,எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் உருவான அமோக வெற்றி பெற்ற “திருடாதே “திரைப்படம் வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவடைகின்றது.(23.03.1961).இப்படத்தின் தயாரிப்பாளர் கவியரசு கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.ஸ்ரீனிவாசன். இப்படத்தில் இடம்பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய “திருடாதே பாப்பா திருடாதே “பாடல் பிரமாதம்.மக்கள் திலகம் எம்ஜியார் அவர்கள் நடித்த முதல் சமூகப்படம். ஆரம்பத்தில் திருடனாக இருந்து பின் திருந்தி உழைத்து வாழும் கண்ணியம் மிக்க ஓர் மனிதனாக எம்ஜியார் அவர்கள் நடித்த அருமையான படம்.இப்படத்தில் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் பாத்திரம் அபாரம் “குலசிங்கம்”என்ற ஓர் கொடிய வில்லன் வேடத்தை அட்டகாசமாக செய்திருப்பார்.
நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலுவின் காமெடி இப்படத்தின் வெற்றிக்கு துணை நின்றது.நல்ல படிப்பினை கூறும் “திருடாதே’
அருமையான திரைப்படம்.
Sgs
