இன்றைய திருக்குறள்
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்(கு) உறுப்பு.
(குறள் எண்:0737)
மு.வ உரை:
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்
திண்டுக்கல் அ.ஷாஜஹான் உரை
ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாவது; வற்றாத ஆறும், ஊற்றும், வளமான மலைத்தொடரும், வான்மழை நீரும், பாதுகாப்பான கோட்டையும் ஆகும்.
திருக்குறள் பரப்புரைஞர் திண்டுக்கல் அ.ஷாஜஹான்
அரசுப்பள்ளி ஆசிரியர்