ஆண்மையை குறைக்க! அசத்தலான! சாலையோர பதநீர்!
கொளுத்தும் வெயிலுடன் கோடை காலம் தொடங்கிவிட்டது.
அதனுடனே… குளிர் பானம் விற்பனைக்காக கலப்பட வியாபாரிகள் கடை விரிக்கும் வேலையும் கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது.
உதாரணமாக பனை, தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த பதநீர், நுங்கு, இளநீர்..! மேலும் தென்னம் தெளுவு அல்லது தெளிவு…!
இதில் இளநீர், நுங்கு போன்றவற்றில் எந்த விதமான வகையிலும் கலப்படம் செய்ய முடியாது.. ஆனால் பதநீரில் மற்றும் தென்னை தெளுவில் கலப்படம் எளிதாக செய்து விடலாம்.
இயற்கை மனிதர்களின் வாழ்க்கை ஆரோக்கியமாக வாழ்வதற்காக வாரிழங்கிய பொக்கிஷமான இதுபோன்ற உணவு பொருட்களில் கலப்படம் செய்து காசு… பணம் பார்க்கும் படுபாதக…படுபாவிகள்… சுகாதார மற்ற தண்ணீரையும், இனிப்பு சுவையுட்டியான ஜாக்ரீனையும் கலந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
ஜாக்ரீன் என்பது ஒரு உணவுப்பொருள் அல்ல…..!
அது ஒரு ஆட்கொல்லி…ரசாயனம்….!
அதை உணவுப்பொருட்களில் கலப்பது கடுமையான கலப்பட குற்றம்.
சர்க்கரையை பயன்படுத்தாமல் அதிக இனிப்பு சுவையை அதிகப்படுத்துவதற்காக மக்கள் நலன் மீது இரக்கம் இல்லாத விபரீத வியாபாரிகளும், கலப்பட உணவுப்பொருள் தயாரிப்பாளர்களும் இதை பயன்படுத்துகின்றனர்.
இவை கலந்த பொருட்களை பயன்படுத்தும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும், வயிற்றுப் பொருமல் ஏற்படும்.
தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீராக பாதிப்பு ஏற்படும். மேலும் தொடர்ந்தால் நரம்பு தளர்ச்சியுடன் கூடிய சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு கண்டிப்பாக ஆண்மையை இழக்கும் அவல நிலை ஏற்படும், என்று கூறுகிறார்கள் மருத்துவ பகுப்பாய்வாளர்கள்…
ஆனால் கலப்பட பொருட்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய உணவு சுகாதார துறை கண்டும் காணாமல் இருக்கிறது…!
உண்மையான பதநீர் நமது புறங்கையில் ஒரு சொட்டு பட்டால் போதும், சிறிது நேரத்தில் சர்க்கரை பாகு போன்ற பிசு… பிசுபிசுப்பு தன்மையை நாம் உணர்ந்து தெரிந்து கொள்ளலாம்.
எனவே நமது ஆரோக்கியம் நமது கையில் என்பதை அறிந்து.. உணர்ந்து.. நாம் தான்ஆரோக்கியமாக இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்…!
தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119