மின்கசிவு காரணமாக தீ விபத்து
பம்மல் அண்ணா நகர் சூர்யா refrigeration shop மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தீ விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதி மக்கள் தீயை அணைக்க தண்ணீரை அடித்தனர் , மேலும் தீ பரவியதால் பம்மல் மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்வினியோகம் அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டது, இந்நிலையில் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென எரிந்ததால் தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாம்பரம் தீயணைப்பு துறை அதிகாரி வினோத் குமார் தலைமையில் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர், இத்தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் பொதுமக்களும் கூட்டம் சேர்ந்ததால் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக பம்மல் சங்கர் நகர் S- 6 சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி மகுதீஸஸ்வரி தலைமையில் காவல்துறையினர் மற்றும் S-6 சங்கர் நகர் க்ரைம் காவல் ஆய்வாளர் பசுபதி மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள் மணிவண்ணன் , பெரியசாமி, மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை செய்தி ஆசிரியர் s.முஹம்மது ரவூப்
தமிழ் மலர் மின்னிதழ்