நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 49

துவர்ப்பு சுவை கொண்ட களக்காய் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை கொண்ட பழமாகும். இதில் விட்டமின் ஏ, சி. சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்பழங்களில் இரும்பு, தாது சத்துக்கள் அதிகமிருப்பதால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் குறைக்க பயன்படுகிறது. கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து,

பித்தத்தை கட்டுப்படுத்தும். இதுதவிர, கிராமங்களில் உடல் ஆரோக்கியத்திற்காக ஊறுகாய் போட்டு களாக்காயை பயன்படுத்துகின்றனர். மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு களாக்காய் நல்லது.

இலைகளில் காரிசிக் அமிலம், காரினால் போன்றவை உள்ளன. கனிகளில் அமினோ அமிலங்கள், குளுக்கோஸ், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

இலைகள், கனி மற்றும் பட்டை போன்றவை மருத்துவ பயன் உடையவை. இலைகளின் கசாயம், விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கு மருந்தாகும். முதிராக்கனிகள் சத்து மிக்கவை. ஊட்டத்திற்கு உகந்தவை. வேர் வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. கசப்பானது. வயிற்றுப்போக்கு தூண்டுவது. சொறி சிரங்கு போக்கவும் பயன்படுகிறது.

தூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள்நாள் தோறும் கண்களில் விட்டுவரக் கண்களிலுள்ள வெண்படலம்,கரும்படலம், இரத்தப் படலம், சதைப்படலம் ஆகியவைதீரும்.

ஜீரணம் தரும் களாக்காய்

காய், பழம், ஆகியவை பசியை தூண்டும். காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் உட் கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இரத்தபித்தம்,தணியாத தாகம், பித்தக்குமட்டல் ஆகியவைதீரும். களாப்பழத்தைஉணவுண்டபின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.

களாப்பழம் உடல் சூட்டைத் தணிக்கும். சூடு காரணமாக தொண்டையில் வலி உள்ளவர்கள் இரண்டு வேளை மட்டும் களாப்பழத்தை உண்டால் தொண்டை வலி குணமாகும்.

வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும். சளியகற்றும்,மாத விலக்கைத் தூண்டும். வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்கரைக் கலந்து தினமும் 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப் பித்தம், சுவையின்மை, தாகம், அதிக வியர்வை தீரும்.

பிரசவமான பெண்களுக்கு 50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டு சுண்டக்காச்சி வடிகட்டி காலை,மாலை இருவேளை கொடுத்து வர மகப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.

களாக்காய் போலவே மாவடு உப்பு சத்து கலந்துள்ளது..

மாம்பூக்கள் பூத்து முடிந்ததும் காய்க்கும் மாங்காய்ப் பிஞ்சுகளே, மாவடுக்கள் எனப்படும், உப்பைத் தொட்டுக்கொண்டு, வெறுமனே சாப்பிட, சுவையாக இருக்கும் மாவடுக்கள், ஊறுகாயில் சிறப்பிடம் பெறுபவை.

இருபது மாவடுக்கள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், வெந்தயத் தூள், கடுகு, உப்பு மற்றும் சிறிது விளக்கெண்ணை.

வாணலியில் விளக்கெண்ணை விட்டு, அதில் கடுகு வெடித்ததும், மிளகாய்த் தூள், வெந்தயத்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கலந்து, பின்னர் இறக்கி, அதில் நன்றாக சுத்தம் செய்த மாவடுக்களை இட்டு, தனியே வைக்கவும்.

மாவடுக்களில் உள்ள நீர், உப்பினால் வெளியேறி, இந்தக் கலவையில் கலந்து, மீண்டும் மாவடுவில் ஏறிவிடும். விளக்கெண்ணையில் விருப்பம் இல்லையெனில், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து, தினமும் சற்று நேரம் குலுக்கி விட்டு, அதன் பின் உபயோகிக்க, சுவையில் அசத்தும், இந்த மாவடு ஊறுகாய், சுவை நரம்புகளை இயங்க வைக்கும்.

சுவைகளை உணர்ந்து உணவுகளை உண்டு ஆரோக்கியத்தைக் காப்போமாக…

 நோய் வருமுன் காப்போம்…!

 நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

 தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119

Leave a Reply

Your email address will not be published.