வாழும் வள்ளுவன்

இன்றும் வாழும் வள்ளுவன்

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போ(டு) உயிரிடை நட்பு. (குறள் எண்:0338)

மு.வ உரை:

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

திண்டுக்கல் ஷாஜஹான் உரை:

முட்டைக்கும் குஞ்சுக்கும் உள்ள உறவு போன்றது உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு.

திருக்குறள் பரப்புரைஞர்
அ.ஷாஜஹான், திண்டுக்கல் அரசுப்பள்ளி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.