நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுவரை மொத்தம் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கொரோனா கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது. ரவூப் தலைமை செய்தியாளர்
தமிழ்மலர் மின்னிதழ்

