பாரிஜாத யோகம்

பாரிஜாத மலர் என்றால் பவளமல்லி மலர். வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.
தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நல்ல வாசனையைப் பரப்பும் தன்மை கொண்டது.

திருமாலுக்கு உகந்த மலர் இது. இந்த மலரின் பெயரில் ஒரு யோகம்தான்
பாரிஜாத யோகம்.

சுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும், அல்லது 11ஆம் வீட்டைப் பார்த்தாலும், அத்துடன் 11ஆம் அதிபதி அஸ்தமனம் பெறாமல் தன் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்கும் நிலையில் இந்த யோகம் ஜாதகனுக்குக் கிடைக்கும்.

பலன்:
ஜாதகன் செல்வம் மிக்கவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் இருப்பான். கற்றவனாக இருப்பான். எப்போதும் விதம் விதமான நல்ல நிகழ்வுகளை அரங்கேற்றுபவனாக இருப்பான். மனைவி மக்கள் என்று பெரிய குடும்பத்தைப் பெற்றவனாக இருப்பான்.

Astro செல்வராஜ்

வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.