நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 45
அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவைகளில் முருங்கை கீரை, முருங்கைப்பூ, இரண்டும் உள்ளது.
முருங்கைக் கீரையில் உப்பு சுவையும், முருங்கை பூவில் புளிப்பு சுவையும் கலந்துள்ளது.
இவைகள் இரண்டையும் நாம் ஏற்கனவே பதிவு செய்து உள்ளோம் என்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.
மேலும் கசப்பு சுவையில் நல்லெண்ணெய் இருப்பதைப் போலவே தேங்காய் எண்ணெயம் உள்ளது
ஆனால் தேங்காய் எண்ணெயில் புளிப்பு சுவையும் கலந்துள்ளது.
சருமத்தின் நலனை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய் முன்னனி வகிக்கிறது. தேங்காய் எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. மேலும் கோடைகாலங்களில் தேங்காய் எண்ணையை மேற்புற தோலில் பூசி கொள்வதால் சூரிய தக்கனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம்.
காயம் ஏற்பட்டு ஆறிக்கொண்டிருக்கும் புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு நிவாரணமாக அக்காயங்களில் தேங்காய் எண்ணெயை நன்கு தடவுவதன் மூலம் நீர் புகாமல் பாதுகாப்பு ஏற்படுவதோடு. அப்புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.
தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரும்.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் தான் எதிர்வரப்போகும் பல வகையான நோய்களில் இருந்து உடலை காக்க முடியும். தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பலமடைந்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே பாதித்திருக்கும் நோய்களை உடனடியாக நீக்கும்.
ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது. இதில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல் .டி. எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.
நமது உடலில் சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்யும் உறுப்புகளாக வயிறு குடல் போன்றவை இருக்கின்றன. வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகள், நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்றவை விரைவில் நீங்க தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் பெற முடியும்.
தினமும் காலையில் எழுந்த உடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக்கொண்டு ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து பிறகு, அந்த எண்ணையை துப்பி விட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் ஆயில் புல்லிங் என்று கூறுவார்கள். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்களில் சொத்தை ஏற்படுதல், ஈறுகள் வலுவிழப்பது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்.
சிறுநீரகங்களில் கால்சியம் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. இதை தடுக்க அளவுக்கு மீறிய கால்சிய சத்துக்கள் நமது உடலில் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.
மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக தேங்காய் எண்ணெய் இருக்கிறது. அடிக்கடி டென்ஷன், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து தலையில் தடவி, ஒரு 20 நிமிடங்கள் இரண்டு கைகளாலும் தலையின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அழுத்தி, மாலிஷ் செய்து வந்தால் எப்படி பட்ட மனம் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.
தேங்காய் எண்ணெய் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டதாகும். தேங்காய் எண்ணையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கி உடல் சீக்கிரத்தில் குளிர்ச்சி அடையும். தேங்காய் எண்ணையை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற உஷ்ண நோய்கள் நீங்கும். கண்களும் குளிர்ச்சி பெறும்.
தேங்காய் எண்ணெய் என்றாலே அதன் நன்மைகள் மட்டும்தான் நம் நினைவுக்கு வரும். தேங்காய் எண்ணெய் ஒரு ஆரோக்கியமான பொருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்த வார்த்தைகளை நாம் கண்டிப்பாக கடைப்பிடித்து தான் ஆக வேண்டும்…
அதுபோல தேங்காய் எண்ணெயால் ஒரு சில பக்கவிளைவுகளும் உண்டு உதாரணமாக..
நமது வயிற்றில் உள்ள ஒருசில நுண்கிருமிகளை ஒழிப்பதற்காக பொதுவாக தேங்காய் எண்ணெயை வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது.
நுண் கிருமிகள் என்று சொல்லப்படும் இந்த பாக்டீரியா ஒழிப்பு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதில் முக்கியமானது வயிற்றுப்போக்குதான். இதனை தடுப்பதற்கு முதலில் சிறிய அளவில் குடித்து பார்க்கவேண்டும். அதனால் எதுவும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றால் தேவையான அளவு குடிக்க தொடங்கலாம்.
முகப்பரு பெரும்பாலும் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையாகும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது. ஆனால் அது சருமம் அதிக எண்ணெய் பசையுடன் இல்லாதவர்களுக்கு மட்டுமே. இல்லையெனில் இது நிச்சயம் பிரச்சினயை ஏற்படுத்தும்.
அதுபோல மிகமக்கியமாகதே ங்காய் எண்ணெய் குழந்தைகளுக்கு நல்லது என்றாலும் சிலவற்றில் கவனத்தில் வைத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக தைராய்டு பிரச்சினையில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு ஹைப்போதைராய்டு என்றால் கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் சில குழந்தைகளுக்கு இது கடுமையான அலர்ஜியை ஏற்படுத்தும்.
எனவே கவனத்துடன் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி நாம் நோயற்ற வாழ்க்கையை எதிர் கொள்வோமாக…!
அடுத்து கசப்பு சுவையை தொடர்ந்து துவர்ப்பு சுவையுடைய உணவு பொருட்களை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்…!
நோய் வருமன் காப்போம்…!
நல்ல உணவு மருந்து நம்ம நாட்டு உணவு மருந்து…!
தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119