சிறந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் – 102 வது ஜனன தினம் இன்று


எம்.என்.நம்பியார் அவர்களின் 102 வது ஜனன தினம் இன்று.(07.03.2021) இவர் இல்லாமல் தமிழ் திரையின் வரலாற்றை எவராலும் எழுத முடியாது. மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களின் திரைவாழ்வில் இவர் எதிர்மறையாக நடித்ததன் பலன் எம்ஜியாருக்கே சாதகமாக அமைந்தது.
இது தான் உண்மை,மக்களுக்கு பிடித்த ஒருவன் எப்படி நாயகனாக திரையில் மின்னுகின்றானோ அவனுக்கு துரோகம் செய்பவர் சினிமாவானாலும் துரோகியே..
அப்படி தன் வாழ்வை கலைக்காக தியாகம் செய்த கலைத்தென்றல் தியாகி சாது நிறைந்த ஐயப்ப குருசாமி எம்.என்.நம்பியார் அவர்கள்.ஹொலிவூட்டில் கூட தேடினாலும் அவரைப்போல் வில்லன் வேடத்தில் நடிக்க ஆள் கிடையாது. “மாயா பஜார் “படத்தில் சகுனியாக நடித்த பாத்திரத்தை மறக்க முடியுமா,”எங்க வீட்டுப் பிள்ளை” விஜயேந்திரன் பாத்திரம்,படத்தின் வெற்றிக்கு கருவூலமே இப்பாத்திரமே…
“சிவந்த மண்” படத்தில் திவானாக மிரட்டும்
பயங்கர விழிகளுக்கு சொந்தக்காரர் எம்.என்.நம்பியாரே..
“நாளை நமதே”படத்தில் இவர் செய்யும் வில்லத்தனம் இப்போது பார்த்தாலும் பீதி நிறைந்ததாகவே இருக்கும். ஸ்ரீதரின் “நெஞ்சம் மறப்பதில்லை “படத்தில் நம்பியாரின் பாரம்பரிய ஜமீன் பார்வை, மிடுக்கு,ஆணவம் நிறைந்த தோற்றம் எந்த நடிகனாலும் கனவிலும் செய்ய முடியாத வில்லத்தனம். “பல்லாண்டு வாழ்க”படத்தில் வித்தியாசமான பயங்கர ஒப்பனையில் இவர் நடித்த வில்லத்தனம் அபாரம்.
“சவாலே சமாளி”படத்தில் நாயுடன் நாயாக வெறி பிடித்த நாய் போல் இவர் நடிப்புடன் கூடி நடித்த காட்சி அட்டகாசம்.
“தெய்வமகன்”படத்தில் கொள்ளைக் கோஷ்டி தலைவனாக அனாயாசமாக இவர் புரிந்த அட்டூழியங்கள் கொஞ்சம் நெஞ்சமா..
தன் பார்வையிலேயே மிரட்டி நடிக்கும் அற்புத வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் அவர்கள்.

தகவல் விக்னேஸ்வரன்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.