விமானத் துறையில் கேள்விப்படாத விஷயங்கள்

முதலில் சம்பளத்தைப் பார்க்கலாம், Co-pilot என்று சொல்லப்படும் Junior First Officer க்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை இருக்கும்.

அப்புறம் 700-800 மணி நேரம் விமானம் ஓட்டிய பிறகு First Officer ஆகலாம், அப்புறம் உங்கள் சம்பளம் வேற லெவல். மூன்றில் இருந்து ஏழு லட்சம் வரை இருக்கும். விமான சிப்பந்திகளுக்கு மாதம் 30-50 ஆயிரம் சம்பளம்.

ஒரு விமானம் மேலே எழும்புவதற்கு ஓடக் கூடிய தூரம் 2-3 கிலோமீட்டர், அது ஓடக் கூடிய வேகம் 240-270 கிலோமீட்டர். இறங்கும் போது 20-30 கிலோமீட்டர் வேகம் குறையும்.

சில வித்தியாசமான விதிமுறைகள் இங்கு பின்பற்றப்படுவது உண்டு.

விமான ஓட்டிகள் தாடி வைக்கக் கூடாது, முழுக் கை சட்டை போடக் கூடாது.

சிப்பந்திகள் முழு கை சட்டை போடலாம், ஆனால் தாடி வைக்கக் கூடாது, அவர்களுக்கு நீச்சல் தெரிந்து இருக்க வேண்டும், முகத்தில் பரு இருக்கக் கூடாது, ரொம்ப உயரமாகவும் இருக்கக் கூடாது, ரொம்ப குள்ளமாகவும் இருக்கக் கூடாது.

விமானத்தின் முக்கியமான ஒரு அங்கம் “Black Box”, நாம் தான் அவ்வாறு குறிப்பிடுகிறோம், ஆனால் அந்தத் துறையில் இருப்பவர்கள் அதை FDR என்பார்கள், அந்தக் கருப்பு பெட்டியில் FDR மட்டுமல்ல CVR இம் இருக்கும். அதற்குப் பெயர் கருப்பு பெட்டி தான் ஆனால் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
FDR – Flight data recorder
CVR – Cockpit voice recorder
இது விமானத்தின் வாலில் இருக்கும், ஏன் என்றால் விபத்து ஏற்பட்டால் அந்தப் பகுதி அவ்வளவு எளிதில் உடையாது.இந்தக் கருப்புப் பெட்டியைக் கண்டு பிடித்தவர் ஆஸ்திரேலியா விஞ்ஞானி David Warren, 1957.

அது என்ன சில விமானத்தில் மட்டும் ஒரு வெள்ளை வால் போல் வருகிறது. அது புகை என்று எல்லோர்க்கும் தெரியும். அந்த விமானம் வெகு உயரத்தில் பறப்பதால் அந்தப் புகை காற்றில் கரைவது இல்லை. அந்த இடத்தில் காற்றின் அடர்த்தி அதிகமா இருக்கிறது என்று அர்த்தம். ஆங்கிலத்தில் அந்தப் புகையை Contrail என்று சொல்லுவார்கள்.

உள்ளூர் விமானங்கள் உயரம் குறைவாகப் பறக்கும், வெளிநாடு செல்லும் விமானங்கள் கொஞ்சம் உயரம் அதிகமா பறக்கும். குறைந்தது 10000 அடி முதல் அதிகபட்சமாக 44000 அடி வரை பறக்கும். 66000 அடி கூட பறக்க இயலும், ஆனால் அனுமதி கிடையாது.

பாதுகாப்பு விதிமுறைகள்:

ஒரு விமானிக்கு உச்சா வருகிறது என்றால், ஒரு பணிப்பெண்ணை அழைத்து cockpit இல் உட்கார வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும். ஒரு வேளை அந்த மற்றொரு விமானி தூங்கி விட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ அந்த cockpit டின் கதவைத் திறந்து விடுவதற்கு.

நீண்ட நேரப் பயணபடும் விமானத்தில் விமானிகள் உறங்குவதற்கு தனியாக பங்க் பெட் உண்டு. நீண்ட நேரப் பயணபடும் விமானத்தில், அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை விமான பணிப்பெண் விமானியுடன் பேச வேண்டும். இரண்டு விமானிகளும் தூங்கி இருக்கலாம் அல்லது இரண்டு பேரும் இறந்து இருக்கலாம். இது ஒரு அதிகபட்ச பாதுகாப்பு முறை தான். இருந்தாலும் இதைக் கடைபிடிக்க வேண்டும்.

அப்படி ஒரு அவசியம் ஏற்பட்டால் விமானப் பணிப்பெண்ணால் cockpit அறைக்குள் நுழைய முடியும்.

ஒரு ரகசிய எண்ணைப் பதிவு செய்தால் கூடுதல் தகவல்: உங்கள் கழிவறையில் உள்ள “Toilet seat” இல் இருக்கும் கிருமியின் அளவு 265 CFU (Colony forming units), அதுவே விமானத்தில் உள்ள tray யில் இருக்கும் கிருமியின் அளவு 2,155 CFU.

விமானத்தில் வழங்கப்படும் உணவு அவ்வளவு சுவையாக இருக்காது. அதற்குக் காரணம் உயர் காற்று அழுத்தினால் உங்களுக்கு வாசனை அறியும் திறன் குறைந்து விடும். மேலும் உங்களுக்கு இனிப்பு புளிப்பும் பகுத்து அறியும் திறனும் மட்டுப் பட்டு விடும்.

கூடுமான வரை விமானத்தில் வழங்கப்படும் உணவைத் தவிர்த்து விடுங்கள். ஏன் என்றால் அது குறைந்தது
6 மணி நேரம் முன்பு தயாரித்து, நீங்கள் விமானம் ஏறும் முன்பு சூடு ஏற்றப்பட்டு இருக்கும்.

sign board (STOL – Short takeoff and landing), சின்ன விமானங்கள் அதை உபயோகித்து கொள்ள… அது போல இன்னும் சில குறியிடுகள் உள்ளன L – Left, R – Right & C – Center.

இன்னும் நிறைய இருக்கு. நான் எனக்குத் தெரிந்த சிலவற்றை மட்டும் பதிவு செய்துள்ளேன். அந்தத் துறையில் இருப்பவர்கள் இன்னும் அறிவார்கள். அவர்களும் பதிவு இட்டால், நாம் மேலும் அறிந்து கொள்ளலாம்.
Rajavel Del: 4.3.21
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.