சசிகலா- டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல்.
சசிகலாவின் தம்பி திவாகரன், இளவரசி, அவரது மகள் கிருஷ்ணப்பிரியா மற்றும் உறவினர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அனைவரும், டிடிவி தினகரனின் நடவடிக்கையால்தான் அனைவரும் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். . அவர், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனக்கு ஜெயலலிதாவை விட அதிக செல்வாக்கு இருப்பதாக கருதிக் கொண்டார். அதனால் நாங்கள் செல்வதை கேட்கவில்லை என்று தினகரன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக தினகரனுடன் ஆலோசனை நடத்துவதை சசிகலா தவிர்த்து வந்தார்.ஜெயலலிதா பிறந்த நாள் கடந்த மாதம் 24ம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போதுதான் தினகரனை அவர் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் அவர் தினகரனை சந்திக்கவில்லை. தினகரனும் கிருஷ்ணப்பிரியா வீட்டுக்கு வர விரும்பவில்லை. ஆனால் சசிகலாவிடம், பாஜவுடன் பேசுவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் முழுமையாக எதையுமே தெரிவிக்கவில்லை. மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியுடன் ரகசிய பேச்சு நடத்தியதும் தெரிவிக்கவில்லை. இப்போது எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து, அமமுகவுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர்கள் அனைவரும் பாஜ சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் சீட்டுகளை தருவதாக உறுதியளித்தனர்.
இதனால் அமித்ஷாவும், கிஷன்ரெட்டியும் பாஜ சின்னத்தில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் கூறத் தொடங்கிவிட்டனர்.
இது அமமுகவுக்கு இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தி விட்டது. கூட்டணி என்று சென்று மாட்டிக்கொண்டோமே என்று தினகரனும் சொல்ல ஆரம்பித்து விட்டார். இதைத்தான் நேற்று சசிகலாவை சந்தித்தபோது தெரிவித்துள்ளார். இதனால் முக்கிய விஐபிக்களை சந்திக்கும்போது, இளவரசி, கிருஷ்ண பிரியா, இளவரசியின் சகோதரர்கள் வடுகநாதன், கண்ணதாசன் ஆகியோர் உள்ளனர். சசிகலா யாரை சந்திக்க வேண்டும் என்பதற்கான அனுமதி கொடுப்பது திருவையாறு கார்த்திக் என்பவராம். இவர்தான் இப்பொழுது சசிகலாவுக்கு உதவியாளராம். இதனால் இந்த தேர்தல் நேரத்தில் சசிகலா அதிரடியாக சில முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கின்றனர். பாஜவின் முடிவைப் பொறுத்து அவரது நடவடிக்கையும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ் செந்தில்நாதன்
இணை ஆசிரியர் தமிழ்மலர்