அதிகமான வெப்பம் நிலவலாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நேற்று முதல் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பல மாவட்டங்களில் வழக்கத்திற்கு அதிகமான வெப்பம் நிலவலாம் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கோடைக்காலங்களில் முக்கிய நகர பகுதிகளில் சில ஆண்டுகளாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாமக்கல், திருவள்ளூர், கரூர், தருமபுரி மாவட்டங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருவள்ளூர், சேலம், வேலூர், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி, தருமபுரியில் இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகமாக
இருக்கும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.