வருமானச்சான்று
வருமான சான்றிதழ்பெற விண்ணப்பித்தல் ரூ.10/-க்காக முத்திரை கட்டண வில்லை ஒட்டப் படவேண்டும்.
பெற்றோரின் தாய் / தந்தை இருவரது ஆண்டு வருமானத்தையும் கணக்கிற்கொண்டு சான்று வழங்க வேண்டும். மாத ஊதியம் ஈட்டுபவராக இருந்தால் வேறு வகையால் பெறப்படும். இதர வருமானங்களையும் சேர்த்தே ஆண்டு வருமானமாக கணக்கிட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களால் அளிக்கப்படும் இச்சான்றிதழ் தாமதத்தை தவிர்த்திடும் பொருட்டு சரக வருவாய் ஆய்வர்கள் வருமான சான்றிதழை மேலொப்பம் செய்திட தேவையில்லை. வட்டாட்சியர் மட்டுமே வருமான சான்று வழங்க வேண்டும்.
வருமான சான்று வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்ல தக்கது.
(அரசாணை எண்.1509 வருவாய்த்துறை நாள்:27.11.91 மற்றும் அரசானண எண்.97 வருவாய்த்துறை நாள்:15.2.94)
பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகைப்பெற
நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பு
1). பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர். சீர் மரபினர் மாணவர்களின் பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்குள் இருக்க வேண்டும்.
2). இந்து ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவர்களின் பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் முழு உதவித்தொகைப்பெற ரூ.38,220/-க்கு குறைவாகவும், அரை உதவித் தொகைப்பெற ரூ.50,920/-க்கு குறைவாகவும் இருந்தால் மத்திய அரசு உதவித் தொகைப்பெற தகுதியுடையவர்களாவார்கள்.
3). மதம்மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்கு குறைவாக இருந்தால் மாநில அரசு உதவித்தொகைப்பெற தகுதியுள்ளவர்களாவார்கள்.
4).மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் இந்து ஆதி திராவிடர் / பழங்குடியினர் மதம்மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவர்கள் வயது வரம்பின்றி முழுக் கல்வி கட்டண சலுகைப் பெற தகுதியுள்ளவர்களாவார்.
மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்கிட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் பெற்றோர்கள் / பாதுகாவலரின் அனைத்து இனங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் கணக்கிற் கொள்ளப்படும் வருமானவரி கணக்குகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படும் வீட்டு வாடகைப்படி மட்டுமே வருமான கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
மாநில அரசு கல்வி உதவித்தொகை வழங்கிட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் பெற்றோர் / பாதுகாவலர் மாத சம்பளம் பெறுபவர்களில் பஞ்சப்படி மற்றும் சீருடைப்படி தவிர பெற்றோர் / பாதுகாவலரின் இதர வருமானங்கள் அனைத்தும் வருமானங்களாக கணக்கிடப்படும்.
(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் கடித எண்.ஐ4/29063/93-ரூ2 நாள்:1.6.93)
எஸ் செந்தில்நாதன் இணை ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்