பெண் நூலிழையில் உயிர் தப்பினார்

இருசக்கர வாகனத்தில் வந்த பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.

முதுமலை அருகே வனப்பகுதி சாலையில் காட்டு யானையிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ளது வாழை தோட்டம் பகுதி. இங்குள்ள சீகூர் பாலம் அருகே கடந்த 20 ஆம் தேதி காட்டு யானை ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. யானை சாலையை கடக்க முயன்றதை கண்ட வாகன ஓட்டிகள் அலட்சியமாக சாலையில் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.

அப்போது கோபமடைந்த யானை சாலையில் வாகனத்தில் இருந்தபடி வேடிக்கை பார்த்தவர்களை துரத்தியுள்ளது.

இதில் இருசக்கர வாசனத்தில் நின்ற பெண்ணை நோக்கி யானை செல்ல, அவர் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

யானை தாக்கும் தூரத்தில் பெண் இருந்த போதும், அவரை ஒன்றும் செய்யவில்லை. இருப்பினும் வாகனத்தை லேசாக சேதபடுத்தியுள்ளது. வனப்பகுதி சாலை வழியாக பயணிப்பவர்கள் அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன் பயணிக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

s.முஹம்மது ரவூப்
தமிழ் மலர் மின்னிதழ்
தலைமை செய்தி ஆசிரியர்,

Leave a Reply

Your email address will not be published.