புதிய தொடக்கப்பள்ளி திறப்பு விழா!
செங்கல்பட்டு 22.02.2021 மாவட்டம், புனித தோமையார்மலை பெரும்பாக்கம் ஊராட்சியில் 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா பாண்டியன் அவர்கள் புதிய தொடக்கப்பள்ளி திறப்பு விழா,மற்றும் தாலிக்கு தங்கம் வழங்குதல், மாணவ மாணவிகளுக்கு இலவச டேட்டா கார்டுகளை வழங்கினார். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர். திரு.அ. ஜான்லூயிஸ் , பெரும்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் எ. பாலு (எ) ரங்கராஜன் சமத்துவ மலர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் திருவள்ளுவர் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தின் நிர்வாகிகளூம் உடன் இருந்தனர் . உங்களுடன் தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர். சி. கவியரசு