மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – பட்ஜெட் உரை
பட்ஜெட் உரையின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குதல் பற்றி அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ஸ்டேட் பாங்க் staff யூனியன் சார்பில் நேற்று மதியம் 2 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன கூட்டம் நடைபெற்றது இதில் அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த பலரும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர் இதில் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு கிருபாகரன் கலந்துகொண்டு பேசியபோது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை வன்மையாக கண்டித்தார் மேலும் இந்த தனியார் மயமாக்குவதை கண்டித்து அடுத்த மாதம் 15ம் தேதி வரை பல தொடர் போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ்
தலைமை செய்தி ஆசிரியர் .
செ சுரேஷ்
B பாலமுருகன்.