முதல் கையெழுத்து போடுவது சமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும்! தமிழிசை சவுந்தரராஜன்!

புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், முதல் முதலில் கையெழுத்து போடுவது சமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று எனது வேண்டுகோளுக்கு இணங்க இங்கே SC/ST பிரிவினரை சார்ந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை தான் நான் முதல் முதலில் போட்டேன் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த கையெழுத்து நான் மருத்துவராக இருப்பதனால், எய்ட்ஸ் கண்ட்ரோல் அதற்காக ஒரு உதவி தொகை கொடுக்கின்ற கையெழுத்தாக இருந்தது. அதனால் ஒன்று ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பட வேண்டும் என்பதற்காக, அவர்களை கைதூக்கி விட வேண்டும் என்பதற்கான கையெழுத்து. இன்னொன்று அனைவரும் உடல் நலத்தோடு இருக்க வேண்டும், எல்லோரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்கான கையெழுத்து.
இந்த கையெடுத்து நிச்சயமாக புதுச்சேரி மக்களின் தலையெழுத்தை நல்ல தலை எழுத்தாக மாற்றும் கையெழுத்துக்காக தான் இருக்கும் என்பதை நான் மிக தாழ்மையுடன் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே நான் அதிகாரிகளுடைய பேசும்பொழுது, இந்த மாநிலத்தில் வேலை இன்மை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.

நிலம் அதிகமாக சில இடங்களில் இருக்கிறது. அதனால் சில தொழிற்சாலைகளும், அதே போல சுற்றுலா துறைக்கு ஊக்கம் கொடுத்து, அதன் மூலம் வேலை வாய்ப்பும், இன்னும் பல துறைகளில் இங்கே தொழிற்சாலைகள் வருவதற்கான முழு முயற்சியை மேற்கொண்டு அதன் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கும், இங்கே தரிசாக கிடக்கின்ற நிலத்தின் மூலம் பல தொழிற்சாலைகளை நிறுவி, அதன் மூலம் வேலை வாய்ப்பை இளைஞர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதல்லோடு நான் பணியாற்றுகிறேன் .

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.