மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாற்று நடும் போராட்டம்.
திருப்பூர் மாவட்டம் இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் சில மாதங்களாக சாலை குண்டும் குழியுமாக இருந்துவந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர் இதை மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் Aசிகாமணி அவர்கள் தலைமை தாங்கினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் இறுதியில் திருப்பூர் மாநகராட்சி உதவிஆய்வாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
செய்தியாளர் ஜீவா
தமிழ்மலர் மின்னிதழ்