திமுகவின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சியாக இருக்கும்! மு.க.ஸ்டாலின் !
மறைந்த முதல்வர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் ஏழைகளுக்கான ஆட்சியை வழங்கியுள்ளனர் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியடைய வேண்டி தமிழக அரசியல் கட்சிகள் தீவிர களப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வப்போது பல மாநாடுகளும் நடத்தப்பட்டு வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அங்கிருந்த மக்களிடையே சிறப்புரையாற்றினார்.
இதன்போது, திமுகவின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சியாக இருந்து வருகிறது.
மறைந்த முதல்வர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் ஏழைகளுக்கான ஆட்சியை வழங்கியுள்ளனர். அதே வழியில் திமுகவும் ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியை வழங்கும். இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை அடைந்து, உங்களின் கஷ்டத்தை தீர்த்து வைக்கும் ” என்று பேசினார்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்