கவியரசு கண்ணதாசன்
இன்னொரு கவிஞர் எழுதி கவியரசு கண்ணதாசன் பெயரில் வந்த பிரபலமான பாடல்….!
1965 இல் பல மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியாகி இமாலய வெற்றி பெற்ற “திருவிளையாடல் “திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பிரபலமான பாடலை கவியரசு கண்ணதாசன் புனைந்ததாக எழுத்தோட்டத்திலும் பதிவு செய்திருப்பார்கள்.இப்படத்திற்கு முன் இதே சாயலில் உருவான “சிவலீலா”என்ற சிவனின் லீலைகளை கொண்ட படமாக அமைந்த இப்படத்திற்கு கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்கள் ஓர் அற்புதமான பாடலை எழுதினார். சந்தர்ப்ப வசத்தால் இப்பாடல் “சிவலீலா”படத்தில் இடம்பெறவில்லை. “திருவிளையாடல்”படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி கணேசன் ஐந்து வேடங்களில் தோன்றி டி.எம்.சௌந்தரராஜனின் கம்பீரக்குரலிலின் பின்னணியில் அருமையாக அமைந்த பாடலான “பாட்டும் நானே பாவமும் நானே”இன்று வரை ஜனரஞ்சகமாக இருக்கும் பாடல்.”சிவலீலா” படத்திற்காக இப்பாடலை உண்மையிலேயே
எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்கள். “திருவிளையாடல்”படத்தின் ஒரு காட்சிக்கு இப்பாடல் பொருத்தமாக இருக்கும் என்றபடியால் கவிஞர் கா.மு.ஷெரீஃப் அனுமதியுடன் இப்பாடலை “திருவிளையாடல்”படத்தில் சேர்த்தனர்.எனினும் இன்றுவரை அப்பாடலை கவியரசு கண்ணதாசன் எழுதியதாகவே பலர் எண்ணிக்கொண்டுள்ளனர்.படத்தில் தம்பி கண்ணதாசனின் பெயரையே போட்டுக்கொள்ளுங்கள் எனப்பெருந்தன்மையுடன் கூறினார் கவிஞர் கா. மு.ஷெரீஃப் அவர்கள். கர்வம் கொண்ட ஒரு பாகவதரின் ஆணவத்தை இறைவனே மாறுவேடத்தில் வந்து அடக்குவதாக இப்பாடலின் வரிகள் அமைந்திருக்கும்.
“கூத்தும் இசையும்,கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ”என இப்பாடலில் காட்சியின் தன்மைக்கேற்ப ஒரு சில வரிகள் அமைந்திருக்கும்.
(Sgs)
செய்தி – விக்னேஸ்வரன்