வாட்ஸ் அப் செயலி.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி தளமான வாட்ஸ் அப், அண்மையில்  தனியுரிமை கொள்கையில் மாறுபாடு செய்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புகள் எழவே தனியுரிமை கொள்கை மாறுபட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கிடையே, வாட்ஸ் அப்பின் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, வாட்ஸ் அப், பேஸ்புக்  ஆகியவை பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது. 

முன்னதாக விசாரணையின் போது, தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக  கருதுவதாக கூறிய உச்ச நீதிமன்றம், மக்களின் தனியுரிமையை  பாதுகாக்க நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் எனவும் கருத்து கூறியது. 

Leave a Reply

Your email address will not be published.