தமிழகத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் அன்றாட பொருட்களின் விலை உயரும்!

தமிழகத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் அன்றாட பொருட்களின் விலை உயரும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்தி உள்ளதாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்து தொழில் தடுமாறும் நிலையில் உள்ளது.

அதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.