உயில் எழுதாத சொத்துக்களைப் பங்கிடுவது எப்படி?


ஒரு இந்துவின் (ஆண்) சொத்துக்கள், உயில் எழுதி வைக்காத நிலையில், அவர் இறந்துபோனால், இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இன் பிரிவுகள் (8)&(9) இன்படி, அவருடைய வாரிசுகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது.

பிரிவு 10 இன் விளக்கங்கள் பின்வருமாறு:

உயில் எழுதாமல் இறந்தவரின் சொத்துக்கள் பட்டியலுடைய Class-I இல் இருக்கும் வாரிசுகளிடையே கீழ்க்கண்ட விதிகளின்படி பங்கிடப்படும்.

விதி 1: இறந்தவரின் விதவை மனைவி அல்லது விதவை மனைவிகள் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

விதி 2: உயிரோடிருக்கும் மகன்களும், மகள்களும் இறந்துபோனவரின் தாயாரும் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளலாம்.

விதி 3: ஒவ்வொரு இறந்துபோன மகன் அல்லது ஒவ்வொரு இறந்துபோன மகள் – இவர்களின் கிளையில் உள்ள வாரிசுகள் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளலாம்.

விதி 4: விதி 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள பங்கினை விநியோகம் செய்தல்.

  1. இறந்துபோன மகன் கிளை வழியில் உள்ள வாரிசுகளிடையில் அவருடைய விதவை மனைவி அல்லது மனைவிகள் தவிர, உயிரோடிருக்கும் மகன்கள், மகள்கள் அனைவரும் சமமான பங்கினைப் பெறுவார்கள். அவருடைய இறந்துபோன மகன்களின் கிளை வழியில் உள்ளவர்கள், அதே பங்கைப் பெறுவார்கள்.
  2. இறந்துபோன மகளின் கிளை வழியில் உள்ள வாரிசுகளிடையே, உயிரோடிருக்கும் மகன்கள், மகள்கள் சமமான பங்கினைப் பெறுவார்கள்.

விதி 1: உயில் எழுதாமல் இறந்தவரின் விதவை மனைவி அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட விதவை மனைவிகள் இருந்தால், சகல விதவை மனைவிகளும் சேர்த்து ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, A என்பவர், (இந்து) உயில் எழுதாமல் இறந்துபோனால், அவர் இறந்துபோன சமயம், இரண்டு விதவை மனைவிகளும், ஒரு மகனும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். A என்பவருக்கு ஒரு வீடு என்ற சொத்து இருக்கிறது. சட்டப்படி, Class-I இல் வரும் அவருடைய வாரிசுகள், ஒரே சமயத்தில் பிறரை தவிர்த்து அந்த வீட்டை தமதாக்கிக் கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே Class-I வாரிசுகள். ஆனால், அதில் 2 பேர் கி என்பவரின்
விதவை மனைவிகள். எனவே, பிரிவு (10)இன் விதி (1)இன்படி, A இன் இரண்டு விதவை மனைவிகளும், வீட்டில் பாதிப் பங்கினை எடுத்துக்கொள்ளலாம். எஞ்சியுள்ள பாதி, அவரின் மகனுக்குப் போய்ச் சேரும்.

இதைப்போலவே, மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டில், A என்பவருக்கு 3 விதவை மனைவிகளும், 3 மகன்களும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். A யின் வீடு, அவர் மரணத்திற்குப் பிறகு 4 பாகங்களாகப் பங்கு வைக்கப்படும். ஒரு பாகம் 3 விதவை மனைவிகளுக்கும், மீதியுள்ள மூன்று பாகங்களும் 3 மகன்களுக்கும் பங்கு வைக்கப்படும். ஆனால், A இறக்கும்போது, அவருக்கு 2 விதவை மனைவிகள் மாத்திரமே உள்ளனர் என்றால், மகன் இல்லாத நிலையில், அந்த வீடு இரண்டு விதவை மனைவிகளுக்கும் சமமாகப் பங்கிடப்படும்.

விதி 2: உயிரோடிருக்கும் மகன்களும், மகள்களும் இறந்தவரின் தாயாரும், ஒவ்வொருவரும் ஒரு பங்கு பெறுவர்.

A என்ற ஒரு இந்து ஆண், உயில் எழுதாமல் இறந்து விடுகிறார் என்று வைத்துக்-கொள்வோம். அவருக்குப் பிறகு அவருடைய தாயார், 2 விதவை மனைவிகள், 2 மகன்கள், 2 மகள்கள் ஆகியோர் சொத்தின் பங்குகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

விதி 1 & விதி 2 என்ற இரண்டையும் சேர்த்து வாசிக்கும்போது A யின் சொத்தை 6 பங்குகளாகப் பிரிக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. A யின் ஒவ்வொரு மகளும் ஒரு பங்கைப் பெறுவர். அதைப்போலவே மகன்களும் ஆளுக்கொரு பாகத்தைப் பெறுவர். சொத்தில் 4 பங்குகள், 2 மகன்களுக்கும், 2 மகள்களுக்கும் போய்ச் சேர்ந்துவிடும். எஞ்சியுள்ள 2 பாகங்களில், கி யின் தாயாருக்கு ஒரு பங்கும், விதி 1 இன்படி, இரண்டு விதவை மனைவிகளும் சேர்த்து ஒரு பங்கையும் பெறுவார்கள்.

விதி 3: ஒவ்வொரு இறந்துபோன மகன் அல்லது ஒவ்வொரு இறந்துபோன மகள் இவர்களின் கிளையில் உள்ள வாரிசுகள் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

கி என்பவர் ஒரு இந்து ஆண், உயில் எழுதாமல் இறந்துபோகிறார். அவருக்கு ஒரு விதவை மனைவி, ஒரு மகன், ஒரு மகள், இரண்டு பேரக் குழந்தைகள் (இறந்துபோன மகன் வழியில்) அதாவது, A இறப்பதற்குமுன்பே, உயிர் துறந்த கி யின் மகன். தற்போது A யின் விதவை மனைவி, சொத்தில் ஒரு பங்கைப் பெறலாம். கி யின் ஒரு மகனும், ஒரு மகளும் ஆளுக்கொரு பங்கைப் பெற உரிமை உடையவர்கள். கி யின் பேரப் பிள்ளைகளைப் பொறுத்தவரையில், விதி 3 இன்படி, அவர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தமாக ஒரு பங்கைப் பெறலாம். எனவே, A யின் சொத்து, அவர் மரணத்திற்குப் பிறகு, 4 பங்குகளாகப் பிரிக்கப்படலாம். A யின் இறந்துபோன மகனின் வழிவந்த இரண்டு பேரக் குழந்தைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட விதி 4(வீ): விதி 3 இல் குறிப்பிடப்பட்ட சொத்து விநியோகம்:

இறந்துபோன மகன் கிளைவழியில் உள்ள வாரிசுகளிடையில் அவருடைய விதவை மனைவி (அல்லது சகல விதவை மனைவிகளுக்கும் சேர்த்து) தவிர, உயிரோடிருக்கும் மகன்கள், மகள்கள் அனைவரும் சமமான பங்கினைப் பெறுவார்கள். அவருடைய இறந்துபோன, மகன்களின் கிளை வழியில் உள்ளவர்கள் அதே பங்கைப் பெறுவார்கள்.

A என்பவர் இறந்ததும், இறந்துபோனவரின், ஏற்கெனவே இறந்துபோன மகனின் கிளை வழியில் உள்ளவர்கள் பெறுவதற்கு உரிமை பெற்ற பங்கினை விநியோகத்துடன் விதி 4(1) தொடர்புடையது. மேலே குறிப்பிட்டதுபோல, உயில் எழுதி வைக்காமல் இறந்துபோன ஒரு இந்து ஆணின் ஏற்கெனவே இறந்துபோன மகனின் கிளை வழியில் உள்ளவர்கள், இறந்துபோனவரின் சொத்தில் ஒரு பங்கைப் பெறுவார்கள். ஏற்கெனவே, இறந்துபோன மகனின் வாரிசுகளிடையே, இந்தச் சட்டத்தின்படி, அந்த ஒரு பங்கு விநியோகிக்கப்படுகிறது.

எனவே, இதே முறையில், A யின் இறந்துபோன மகனுக்கு 2 விதவை மனைவிகளும், 2 மகள்களும் இருந்தால், கி இறந்துபோன சமயத்தில், A யின் சொத்தில் ஒரு பங்கை அவர்கள் அனைவரும் சேர்த்து அடைந்திருப்பார்கள். அவர்களுக்கிடையில், இந்த விதியின் அடிப்படையில், அந்த ஒரு பங்கை விநியோகம் செய்யலாம். எனவே, அவர்கள் பெற்ற ஒரு பாகம், மூன்று சம பங்குகளாகப் பிரிக்கப்படும் A யின் இறந்துபோன மகளின் இரண்டு மகன்களுக்கு 2 பாகங்களும் (ஒருவருக்கு ஒரு பங்கு) கி யின் இறந்துபோன மகனின் 2 விதவை மனைவிகளுக்கு ஒரு பங்கும் என்ற முறையில் பங்கு வைக்க முடியும்.

விதி 4(டட) : விதி 3 இல் குறிப்பிடப்பட்ட பங்கின் விநியோகம்

இறந்துபோன மகளின் கிளை வழியில் உள்ள வாரிசுகளிடையே, உயிரோடிருக்கும் மகன்கள், மகள்கள் சமமானப் பங்கினைப் பெறுவார்கள்.

உயில் எழுதி வைக்காமல் இறந்துபோன ஒரு இந்து ஆணின் சொத்துப் பங்கினை விநியோகம் செய்யும் நெறிமுறைகளுடன் இந்த விதி தொடர்புடையது. இது விதி 3 இன் கீழ், அவருடைய இறந்துபோன மகளின் கிளை வழிகளின்மேல் ஆளுமை செலுத்துகிறது. இப்போது விதி 4(ii) இன்படி இறந்துபோன மகளின் உயிரோடிருக்கும் மகன்களும், மகள்களும் சமமான பங்குகளைப் பெறும் முறையில், சொத்து மேற்கொள்ள முடியும். எனவே, பாகப் பிரிவினையை A என்ற இந்து ஆண் உயில் எழுதி வைக்காமல் இறந்துபோனால், அவருக்கு ஒரு விதவை மனைவியும், இறந்துபோன மகள் வழியில் ஒரு பேரனும், ஒரு பேத்தியும் இருக்கும் நிலையில்,

A யின் சொத்துக்கள், அவர் மரணத்திற்குப் பிறகு, இரண்டு பாகங்களாக பங்கு வைக்கப்படும். ஒரு பங்கு அவருடைய விதவை மனைவிக்கும், இன்னொரு பங்கு இறந்துபோன மகளின் கிளை வழிக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். மகளின் கிளை வழி பெற்ற பாகம் அவரின் மகனுக்கும், மகளுக்கும் சமமாகப் பங்கிடப்படும்.

ஆக்கம் – எஸ்,முருகேசன்

செய்தி – செந்தில்நாதன்

Leave a Reply

Your email address will not be published.