தென்தமிழக மாவட்டங்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல்?

தென்தமிழக மாவட்டங்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவு குறைவான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது

இருந்தாலும் இன்னும் முழுமையாக கொரோணா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வரவில்லை. இந்நிலையில் தென் தமிழகப் பகுதியான நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. வழக்கமாக மழைக் காலத்தைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்த அளவில் ஏற்படும்.

ஆனால் தற்போது டெங்கு பாதிப்பு கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சற்று கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் வீட்டை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ் மலர் மின்னிதழ்
கொடைகானல் செய்தியாளர,
J.தேவபிரபு.

Leave a Reply

Your email address will not be published.