2,000-க்கும் மேற்பட்ட பறவைகள் அழிப்பு!
நேபாளத்தை அச்சறுத்தும் பறவை காய்ச்சல்… 2,000-க்கும் மேற்பட்ட பறவைகள் அழிப்பு!
இந்தியாவில் அச்சறுத்தி வரும் நிலையில் பறவை காய்ச்சல் நேபாளத்திலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மனிதர்களை அச்சறுத்தி வரும் நிலையில் பறவை காய்ச்சலும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் 9 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேபாளத்திலும் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.
இது இதுதொடர்பாக அந்த நாட்டு வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தலைநகர் காத்மண்டுவில் தர்கேஷ்வர் நகராட்சி பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 1,865 வாத்துகள், 622 காடைகள், 32 கோழிகள், 25 வான்கோழிகள் ஆகிய பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன. 542 முட்டைகள் மற்றும் 75 கிலோ கோழி தீவனம் ஆகியவையும் அழிக்கப்பட்டன.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்