கோவையில் இருந்து திருப்பூருக்கு மெட்ரோ ரயில்

கோவையில் இருந்து திருப்பூருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அமலாக்க வலியுறுத்தல்…

திருப்பூர்: கோவையில் இருந்து, திருப்பூருக்கு ‘மெட்ரோ ரயில்’ திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில், சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய நகர்ப்புற ‘மெட்ரோ ரயில்’ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு, இப்பணிகளை விரைவு மற்றும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘தென்னக மான்செஸ்டர்’ ஆன கோவையில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை, வழித்தடங்களைத் தேர்வு செய்து தயாரிக்கப்பட்டது.

மொத்தம் 136 கி.மீ., துாரம், அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, சத்தியமங்கலம் சாலை, தொண்டாமுத்தூர் சாலை ஆகிய ஐந்து வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கூடுதலாக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு செல்லும் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், ”கோவையை திருப்பூருடன் இணைக்கும் வகையிலான, ‘மெட்ரோ ரயில்’ திட்டம் கட்டாயத் தேவை” என்று பின்னலாடை தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.