தமிழக முதல்வருக்கு வாழ்த்து..
தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்பி..
தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து திமுக எம்பி கனிமொழி டுவிட் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களில் கூறும் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அனைத்து கூட்டுறவு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வரிடம் இருந்து அறிவிப்பு வெளிவந்தது. இந்த நிலையில் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு கனிமொழி எம்பி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி. தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிச்சாமிக்கு நன்றி, வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் திமுக தலைவர் கொடுக்கும் வாக்குறுதிகளை எல்லாம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிறைவேற்றி மக்களின் மனதை வென்று வருகிறார் என்பது தெரியாமல் கனிமொழி வாழ்த்து தெரிவித்து வருவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்