ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து தனியாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில்  மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளை நிர்வகிக்கும் வகையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் தனியாக பல்கலைக் கழகம் உருவாக்கப்பட உள்ளது.

கல்லூரிகள் நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தில் அமைக்கப்படும் பல்கலைக் கழகம் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்ற உள்ளார். அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது.

செய்தி ரசூல் நிருபர்

Leave a Reply

Your email address will not be published.