ஜெயலலிதாவின் சமாதிக்கு..

ஜெயலலிதாவின் சமாதிக்கு பிப்-23
நள்ளிரவில் செல்லும் சசிகலா?

சிறையிலிருந்தும் மருத்துவமனையிலிருந்தும் வெளியே வந்துள்ள சசிகலா வருகிற பிப். 8 ந்தேதி சென்னை வருகிறார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் பிப்.8 என்று வருகை தேதி மாறி விட்டதால் சசிகலாவின் உயிர்த்தோழி ஜெயலலிதாம்மாவின் சமாதிக்கு பூட்டுப்போட்டு விட்டனர்.

சசிகலா விடுதலையாகும் அதே நாளில் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவை நடத்தும் யோசனையை அதிமுக தலைமைக்குத் தந்தார் அந்தக் கட்சிக்கான வியூக வகுப்பாளர் சுனில். இப்படிச் செய்வதன் மூலம் சசிகலாவின் சென்னை வருகையால் ஏற்படும் எழுச்சியை இருட்டடிப்பு செய்துவிடலாம் என்பது சுனிலின் கணக்கு. அதனால் அவசர அவசரமாக நினைவு மண்டப திறப்பு விழாவுக்கு தேதி குறித்தது அதிமுக அரசு
இப்போது ஜெயலிதாம்மாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24 ஆம் தேதி வருவதையடுத்து நினைவிடம் கண்டிப்பாக திறக்கப்படும். இதனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சசிகலா, பிப். 23 நள்ளிரவோ அல்லது அதிகாலையிலோ சசிகலா ஜெயலலிதாவின் சமாதிக்குச்சென்று நியாயம்கேட்க உள்ளார். அந்நிகழ்வு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.