ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சியில் மக்களின் கோரிக்கைகளை கேட்டு மனுக்களை பெறும் நிகழ்ச்சி, வேலூர் மாவட்டம் கந்தனேரி பள்ளிகொண்டா கோல்கேட் அருகே நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பேசிய ஸ்டாலின், “தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்கள், விவசாய கடன்கள், 5 சவரன் அளவுக்கு வைக்கப்பட்ட தங்க நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும். மக்கள் கோரிக்கைகளை, தன் முதுகில் ஏற்றி இருக்கிறார்கள், அதை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவது நிச்சயம். இதற்காக, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தனி இலாகா ஏற்படுத்தப்படும்.
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், மக்கள் தன்னை கேள்விகேட்கலாம்
லட்சக்கணக்கான பொது மக்களை வேலை இல்லாமல் ஆக்கிவிட்டது அதிமுக அரசு. கழகம் உருவாக்கிய தமிழகத்தை உருகுலைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகள் திமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்டன. 1.20லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டன.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும்
திமுக அட்சிக்கு வந்தால் உழலில் ஈடுபடுபவர்கள் சிறைக்கு செல்வார்கள். ராணிப்பேட்டை மாட்டத்தில் அமைச்சருக்கு இணையாக உழல் செய்பவர் அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி. கந்து வட்டி போல மின் கட்டனத்தில் கொள்ளையடிக்கிறது அதிமுக. ராணிப்பேட்டை மட்டும் அல்ல தமிழ்நாட்டில் மாசு ஏற்படுத்தும் தொழிச்சாலைக்கு திமுக ஒருபோதும் துணையாக இருக்காது. மத்திய ,மாநில அரசுகள் கூட்டு சதி செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சி செய்து வருகின்றன” எனக் கூறினார்.
S.முஹமது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.