உலகப் பாவை – தொடர் – 29
திருக்குறள்: உலகப் பாவை
29. அறிவியலால் ஆக்கம்
வேண்டும்
அறிவியலால் இயற்கை
தன்னை
அணுவணுவாய் அறிந்து
மாந்தர்
பொறிதெளிந்து கூடி வாழும் புதியநெறி புலர வேண்டும்;
வெறிகொண்ட மனிதப்
போக்கு
வேற்றுமைகள், தீமை யாவும் அறிவியலின் ஆற்றல்
தன்னால்
அழிவின்வாய்ச் சேர வேண்டும்;
அறிவியலால் உலகம் எங்கும் அன்புறவு பூத்துச் சான்றோர் குறிக்கொள்ளும் நலன்கள் யாவும்
கூடியேகை கூடல் வேண்டும்;
அறிவியலால் அமைதி ஓங்கி அனைத்துலகும் மேன்மை காண உரியவழி எடுத்துக் கூறி
உலாவருவாய் உலகம் பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்
திருக்குறள்: உலகத் திருக்குறள் மையம், சென்னை