அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சீனா? இந்த பாஸ்போர்ட் எங்க நாட்டில் செல்லாது?

பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் இனி சீனாவில் செல்லாது என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் மீது சீனா இவ்வாறு கோபத்தில் கொந்தளிக்க காரணம் என்ன தெரியுமா?.. சீனா அறிமுகம் செய்துள்ள சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹொங் ஹொங் (British National(Overseas) Passport Holders) நாட்டவர்கள் பிரிட்டனின் குடியுரிமையை பெற திட்டமொன்றை பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது.

அதன்படி சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹொங் ஹொங் நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனில் வாழ்வதற்கு குடியுரிமை பெற வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா முதலில் பிரிட்டன் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது மிகப் பெரிய குற்றம் என்று கூறியது. தற்போது, வரும் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து பிரிட்டனின் கடல் கடந்த பாஸ்போர்ட்களை பயண ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி சீனா தனது கோபத்தை வெளிக்காட்டி உள்ளது.
S.முஹமது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.