முதலமைச்சர் சென்னையில் ஸ்மார்ட் பைக் சேவையை தொடங்கி வைத்தார்!
காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஏற்கனவே சைக்கிள் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட் பைக் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி இத்திட்டத்தின் முதற்கட்டமாக மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா, மெரினா கடற்கரை, திருமங்கலம், பாண்டிபஜார் உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள http://onelink.to/t74gmp என்ற இணையதள முகவரியில் ஸ்மார்ட் பைக் கைபேசி செயலியை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த ஆப் மூலமாக இயக்கி கொள்வதுடன் பயனாளிகள் கட்டணத்தையும் செலுத்தி கொள்ள முடியும்.
இது பேட்டரியால் இயங்க கூடியது. 10 நிமிடங்களுக்கு பத்து ரூபாய் அதற்கு அடுத்த ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஜிஎஸ்டி கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளிப்பதன் அடிப்படையில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்