நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -18

நாட்டு மருந்து: நல்ல மருந்து…! நம்ம நாட்டு மருந்து….! (18)

அஞ்சரை பெட்டியில் உள்ள அரு மருந்துகளில் ஒன்று வெந்தயம்..!

இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் தவறு..

 அதாவது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வார்த்தைக்கு பொருத்தம் வெந்தயம் தான்..!

இந்திய சமையல் மசாலாக்களில் அதிகம் பங்கெடுத்து எடுத்துக்கொண்டது வெந்தயம்.

வெந்தயம் அது சார்ந்த கீரைகளுக்கு அதிக மகத்துவம் உள்ளது.

வெந்தயத்தில் ஏராளமான அதிசக்திவாய்ந்த மருத்துவப் பண்புகள் உள்ளது..!

தமிழகத்தைப் பொருத்தவரை வெந்தயக் களி, வெந்தய குழம்பு,வெந்தய கீரை குழம்பு, வெந்தய கீரை பொரியல் என்பது மிகவும் பிரசித்தம் பெற்றது.

புளியோதரை யில் வெந்தயத்திற்கு முக்கிய பங்கு உண்டு..!

உஷ்ண சம்பந்தமான வியாதிகளை உடனே குறைக்க வல்லமை பெற்றது வெந்தயம்…!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.  இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து பராமரிக்கப்படும்.

 வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால் இன்னும் நல்ல பலன் தெரியும்.

  வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.  மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரோல் அளவைக் குறைப்பதால் இதய பிரச்சினைகள் வர வாய்ப்பு இல்லை.

 வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

 வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.

 செரிமான பிரச்சினை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.  ஏனெனில் இதில் நார்ச்சத்து, கல்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.

 அதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சினைகள், அல்சர் போன்றவை நீங்கும்.

 வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

 நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண் நீங்களாக இருந்தால்,  வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

 உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்து வந்தால், வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள்.  இதனால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்.

 வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

 வெந்தயம் பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அதிலும் ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால்,  டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, நீண்ட நேரம் உறவில் இன்பத்தை அனுபவிக்க உதவும்.

 ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளைப் போக்கும்.  ஆண்கள் சிலருக்கு விறைப்புத்தன்மை பிரச்சினை மற்றும் விரைவில் விந்து வெளியேறும் பிரச்சினை இருக்கும்.  இத்தகையவர்களால் உறவில் சிறப்பாக செயற்பட முடியாது. வெந்தயம் அதற்கு சிறந்த நிவாரணி.

 ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், பிறப்புறுப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பிரச்சினைகள் நீங்கும். ஆண்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உதவும்.

 தாம்பத்திய உறவுப்பிரச்சினைகள், இயற்கை மருத்துவம், ஆண்மை குறைவு, உடலுறவு பிரச்சினைகள் போன்றவற்றிற்கு பெரும்பாலானோரின் இயற்கையான மருத்துவம் இதுவே.

இன்றைய தலையாய பிரச்சனை இதுவே.. இதன் அடிப்படையிலேயே பல பிரச்சனைகள் உருவாகி வருகிறது.

எனவே எதையும் வருமுன் காப்பது நலம் என்பதுதான் நமது அடிப்படைக் கொள்கையாகும்.

நல்ல (உணவு) மருந்து…!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

மூலிகை மருத்துவ தொகுப்பு:-  சங்கரமூர்த்தி 7373141119

Leave a Reply

Your email address will not be published.