அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தை?
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டினார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தையை அதன் குடும்பத்தினர் வளர்க்க இயலாத சூழ்நிலை காரணத்தால் அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்க விருப்பம் தெரிவித்தனர். அதன்படி அக்குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் அரசுத் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆண் குழந்தைக்கு இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி “ஆதவன்” எனப் பெயர் சூட்டினார்.அதன் பின் அக்குழந்தையை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.