மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்ஃபி மையம் திறந்து வைத்தார் முதல்வர்?
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று திறந்து வைத்த மெரினாவில் உள்ள ‘நம்ம சென்னை’ செல்பி மையத்தில் பலரும் குடும்பமாகவும், நண்பர்களுடன் வந்து அங்கு நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.
பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அதன்முன்பு செல்பி எடுத்து சென்னை மீதான தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வசிப்பவர்களிடம் சென்னையில் உங்களின் பேவரைட் எது? என்று கேட்டுப்பாருங்கள். நீங்கள் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் அங்கு இருந்து மெரினா பீச் என்று சுடச்சுட பதில் கிடைக்கும். அந்த அளவுக்கு சென்னைவாசிகளுக்கும், வெளியூர்காரர்களுக்கும் மெரினாவின் மீது ஈர்ப்புகடலையை கொறித்து கொண்டு கடலை போடுவதும், கடலை பார்ப்பதும் அவ்வளவு சுகமான அனுபவம். இந்த மவுசுக்குத்தான் மெரினா கடற்கரையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ என்ற செல்பி மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று திறந்து வைத்தார். அங்கு ‘நம்ம சென்னை’ என்ற டிஜிட்டல் போர்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் பெருமையினையும் மாண்பினையும் கொண்டாடும் விதத்திலும், பொதுமக்கள் தாங்களே புகைப்படம் எடுத்து சென்னை மாநகரத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த செல்பி மையம் ரூ.24 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது.
‘நம்ம சென்னை’ செல்பி மையத்தை முதல்வர் திறந்து வைத்து சென்றவுடன், பலரும் பெண்கள், குழந்தைகளுடன் குடும்பமாகவும், நன்பர்களுடன் வந்து அங்கு நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்து சென்னை மீதான தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். வாகனங்களில் செல்லும் பலரும் அதனை தங்கள் செல்போனில் படம்பிடித்து செல்கின்றனர்.
S.முஹமது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்