Jio-airtel-vi சிறந்த ரீசார்ஜ் திட்டம்?
மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள்.
அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வீ-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திடங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்யலாம்.
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்டவற்றை பெற முடியும். எனினும் இந்த திட்டத்தில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 100 இலவச எஸ்எம்எஸ்-களுக்கு பின்பு, அடுத்து ஒவ்வொரு எஸ்எம்எஸ்-ஸூக்கும் 1 ரூபாய் கட்டணமாகும்.
அதேபோல ஏர்டெல் மற்றொரு திட்டமான 2,698 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 1 வருடத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் விஐபியை பெறலாம். மேற்கண்ட திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
பிஎஸ்என்எல்-லின் வருட திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் 1,999 ரூபாய்க்கு வருட திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 3ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த டேட்டா முடிந்த பிறகு 80kbps வேகத்திற்கு மாறுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 இலவச டேட்டா கிடைக்கிறது.
VI -யின் வருட ரீசார்ஜ் திட்டங்கள்
வீ-ஐ -யின் சிறந்த வருட ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்று 2,595 ரூபாயாகும். இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் கால்ஸ் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா என அனைத்தும் மற்ற நிறுவனங்களைப் போன்றே கிடைக்கிறது. அதோடு ஜீ எண்டர்டெயின்மென்ட், வீ மூவிஸ் & டிவி உள்ளிட்ட சேவைகள் கிடைக்கிறது.
இது தவிர மற்றொரு வருட திட்டத்தினையும் வழங்குகிறது. இந்த திட்டத்தினை பெற 2,399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இதில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால், இலவச எஸ் எம் எஸ் உள்ளிட்டவை மேற்கண்ட திட்டத்தினை போலவே கிடைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஜீ பிரிமீயம் சேவை மட்டும் இல்லை.
ஜியோவின் வருட திட்டம்
ஜியோவின் வருட திட்டத்தினை பொறுத்தவரையில் 2,399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ் எம் எஸ் உள்ளிட்டவை கிடைக்கும். இந்த 2ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64KBPS ஆக டேட்டா வேகம் குறையும். இந்த திட்டத்தில் ஜியோ ஆப்பிற்கான இலவ்ச சந்தாவினையும் வழங்குகிறது.
ஜியோவில் ரூ.2,121 நீண்ட கால ரீசார்ஜ் திட்டம் உள்ளது. இது 1.5 ஜிபி தினசரி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு சலுகைகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மை மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கு காம்ப்ளிமென்ட்டரி அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்