நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் -15

நல்ல மருந்து…!

 நம்ம நாட்டு மருந்து…(15)

————————————————–

கடுகுகளில் அதிக நார்சத்து உள்ளது.

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

கடுகு எலும்புகளின் உறுதிக்கும்,  ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும்,  ரத்த அணுக்கள் உற்பத்தியில் அதிகளவு பங்கெடுக்கின்றன. இருமலை கட்டுப்படுத்த கூடியதும் விஷத்தை முறிக்க வல்லது. ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது கடுகு.

கடுகு எண்ணெயில் நாம் வழக்கமாக உபயோகிக்கும் நல்லெண்ணெய் போன்று ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

அதில் உள்ள சில உட்பொருள்கள் கேன்சர் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

உணவுப் பொருளாகும்.

கடுகு நமது உடலில் கேன்சர் உருவாகக் காரணமான செல்களின் வளாச்சியைத் தடுக்கிறது.

தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் போது கடுகு திறம்பட செயல்படுகிறது. இதில் நரம்பு மண்டலத்திற்கு ஆறுதலளிக்கும் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் வலிகள் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு நிவாரணம் தரும்.

 செரிமானப் பிரச்சனையால் ஏற்படும் அவதியில்லிருந்து விடுபட கடுகு உதவும்.

கடுகு விதைகளில் ஏராளமான நார்ச்சத்து அடங்கியுள்ளது

 இது கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

மேலும் உடலின் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.

ஒவ்வொரு இந்திய வீடுகளில் கடுகு எண்ணெய் பொதுவாக பயன்படுத்தப்பட்டு இது இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முற்றிலும் நன்மை செய்கிறது.

இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க உதவுவதோடு ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

 இவை இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகும்.

கடுகு எலும்புகளை உறுதியாக்குகிறது, மேலும்  நகங்கள், தலைமுடி மற்றும் பற்களுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது.

கடுகில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ப்ளாமேட்டரி மூலக்கூறுகள் அடங்கியுள்ளது. இது ஈறுகள் எலும்புகள் மற்றும் பற்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.

கடுகு விதைகள் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பருக்களில் இருந்து பாதுகாக்கிறது.

 இந்த சிறிய கடுகு விதைகளில் அடங்கியுள்ள ஆன்டி இன்ப்ளாமேட்டரி மூலக் கூறுகள் உடலில் வீக்கத்தை குறைக்கிறது.

உணவில் கடுகை சேர்த்துக் கொள்வதன் மூலம் முதுமையைத் தாமதப்படுத்தலாம்.

 கடுகு விதைகளில் வைட்டமின் ஏ, கே மற்றும் சி நிறைந்து காணப்படுவதால் இது வயதாகும் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

விஷம், பூச்சிமருந்து அருந்தியவர்களுக்கு இரண்டு கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும். கடுகு, மஞ்சள் சமஅளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிக்கட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.

கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

இருமல், மூக்கு நீர் வடிதல், கோழை, வெறி, காணாவிடக்கடி, குடைச்சல், முடம், மந்தம், குழம்பிய உமிழ்நீர் கழிச்சல், வயிற்றுவலி, முப்பிணி விலகும். மேலும் சீதக்கடுப்பு, கீல் வாயு, செரியாமை, தலை சுற்றல், விக்கல் இவைகளையும் போக்கும்.

கடுகு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வலுவிழந்த முடி உடைந்து காணப்படுபவர்களுக்கு இது சிறந்தது. புரதம், சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ‘ஏ’, ‘இ’ ஒமேகா-3 மற்றும் ஒமேகா6 போன்றவைகள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

வலுவான கூந்தலுக்கு இது உதவும். வைட்டமின் இ ஆன்டிஆக்ஸிடன்ட் திறன் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவும். முடி உதிர்வை தடுக்கும். பளபளப்பு தன்மையை தருகிறது.

வேக வைத்த அரிசியில் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது கடுகு போட்டு நன்கு வெடித்த பின்பு சிறிது சீரகம் போட்டு அதில் வேகவைத்த அரிசியை போட்டு நன்றாக கிளரி கொடுத்து சூடாக பரிமாற சுவையாக இருக்கும்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது போல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் 3 மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள். கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது, அதாவது நோய் வருமுன் காக்க நமது முன்னோர்கள் கடுகை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள்..

நல்ல (உணவு) மருந்து…!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141119

Leave a Reply

Your email address will not be published.