4ம் பாவமும் சுக அமைப்பும்.

4ம் பாவமும் சுக அமைப்பும்

4 ஆம் பாவம் மட்டுமே சுகத்தை அடிப்படையாக கொண்டது. 

4ஆம் பாவத்தில் புதன் பலமாக இருந்தால் அவரின் கல்வி மிகச் சிறப்பாக இருக்கும்.

செவ்வாய், குரு, சுக்கிரன் இருந்தாலும் நல்ல கல்விமான்.
இந்த கிரகங்கள் அடையும் பலத்திற்கு ஏற்ப உயர் கல்வியைப் பெறுவர்.

4ஆம் பாவத்தையும் அதில் சுக்கிரன் இருக்கும் பலத்தையும் பொறுத்து கார், பைக் வாகனம், ஆபரணம் வாங்கும் நிலையை அறியலாம்.

4 ஆம் பாவத்தையும், அதில் செவ்வாய் இருக்கும் பலத்தையும் பொறுத்து, அவர்களின் அசையாத சொத்துகள் நிலை அறியலாம். அதாவது வீடு, நிலம், பண்ணை வீடுகள், தோட்டம் இவற்றை அறியலாம். 4 ஆம் பாவத்தையும் அதில் சந்திரன் இருக்கும் பலத்தையும் பொறுத்து, அவர்களின் தாயின் பாசம், ஆயுள் ஆகியவற்றை அறியலாம்.

4 ஆம் பாவத்தையும் அதில் குருவின் பலத்தையும் பொறுத்து அவரின் வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகள் சுக போகங்கள், புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.
4 ஆம் இடத்தை சனி, ராகு, கேது பார்த்தால் அல்லது சேர்ந்து இருந்தால், ஜாதகரின் தாய்க்கு சுகம் உண்டாகாது. கஷ்டம் தான். 

4 ஆம் இடம் 6, 12க்கு உரியவரால் பார்க்கப்பட்டால், நீச்ச கிரகத்தினால் அல்லது பகை கிரகத்தினால் பார்க்கப்பட்டால், ஜாதகர் அந்நியர் வீட்டில் தான் வசிப்பார். 

Astro Selvaraj Trichy*
Cell: 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.